தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16 முதல் தொடக்கம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16 முதல் தொடக்கம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16 முதல் தொடக்கம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16 முதல் தொடக்கம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வு எப்போது என்பது குறித்தான அறிவிப்பிற்காக காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு துவங்கப்பட்டது. தேர்வு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியில் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்தான ஆலோசனை கடந்த சில வாரங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வின் போது ஆன்லைன் நெட் வசதி சரியாக இல்லாத காரணத்தினால் நேரடி கலந்தாய்வு நடத்தலாம் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது.

திருப்பூரில் ஜூன் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – எழுத, படிக்க தெரிந்தால் போதும்!

நீட் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவிற்காகவும் காத்து கொண்டிருந்தனர். பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் பொது பிரிவினரை சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்தான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வின் கடினத் தன்மையைப் பொறுத்து தான் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்படவுள்ளது. கலந்தாய்வில் முதல் 15 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் கல்லூரிப்படிப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here