தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு – நாளை (அக். 19) முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு - நாளை (அக். 19) முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு - நாளை (அக். 19) முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு – நாளை (அக். 19) முதல் தொடக்கம்!

தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (அக் 19) முதல் தொடங்க இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.

மருத்துவ கலந்தாய்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 8,225 இடங்கள் இருக்கின்றன. அதில் 848 அகில இந்திய இடங்களும், 6,067 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 1,380 இடங்கள் இருக்கின்றன.

இந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 22 ஆயிரத்து 736 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 22054 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஆண்கள் 8029 விண்ணப்பங்களும், பெண்கள் 14024 விண்ணப்பங்களும் மற்றும் மாற்று பாலினத்தனவர்களும் விண்ணப்பித்துள்ளனர். வழக்கம் போல ஆண்களின் விண்ணப்பங்களை விட பெண்களின் விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் – ரூ. 500 செலுத்தி 2.5 லட்சம் வரை திரும்ப பெறலாம்!

மேலும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 454 இடங்கள் இருக்கின்றன. மேலும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 104 இடங்களும் மொத்தம் 558 இடங்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் 2674பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நாளை (அக் 19 ) முதல் 20 ஆம் தேதி வரை விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவினருக்கான கலந்தாய்வும், 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு 20ஆம் தேதியும், பொது பிரிவினருக்கான அதாவது சிறப்பு பிரிவினர் அல்லாத அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இணையவழி மூலம் நாளை (அக் 19) முதல் 25ம் தேதி வரை நடைபெறும் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்.பி.டி.எஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் நவம்பர் 15 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!