குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதல் மகாராஷ்டிராவில் 34 மையங்களில் தொடர்கிறது; 6900 பேல்களுக்கு சமமான 36,600 குவிண்டால் பருத்திப்பஞ்சு , பொதுமுடக்க சமயத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.

0

மகாராஷ்டிராவில் உள்ள வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களிடம் பருத்திப் பஞ்சினை விற்பதற்கு விவசாயிரகள் இன்னல்களை எதிர்கொள்வதாக ஊடகச் செய்திகள் வெளிவந்தன.

இந்தியப் பருத்தி நிறுவனம் (CCI), அதன் முகவரான மகாராஷ்டிர மாநில பருத்தி விளைவிப்பாளார்களின் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்புடன் இணைந்து, இந்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் அமல்படுத்த முனைப்பாகவும் தயாராகவும் உள்ளதாக ஜவுளி அமைச்சகம் உறுதியளிக்கிறது.

அக்டோபர் 2019 முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.  25 மார்ச் 2020 நிலவலரத்தின் படி, 18.66 இலட்சம் டன் பேல்களுக்கு சமமான ரூ.4995 கோடி மதிப்புள்ள 91.90 இலட்சம் குவிண்டால் பருத்திப்பஞ்சு , மகாராஷ்டிராவில் உள்ள பருத்தி விவசாயிகளிடம் இருந்து 83 மையங்களில் இந்திய பருத்தி நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டது.

25 மார்ச் 2020 வரை, மகாராஷ்டிராவில் விளைவிக்கப்பட்ட மொத்த பருத்திப்பஞ்சில் 77.40 சதவீதம் சந்தைகளுக்கு வந்து, இந்திய பருத்தி நிறுவனத்துக்கும், தனியார் வணிகர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. பொதுமுடக்கம் அமலுக்கு வரும் போது, 22.60 சதவீதம்  பருத்தி வர வேண்டியதிருந்தது.  வெளியில் உள்ள இந்த பருத்திப்பஞ்சு, ரூ.2100 கோடி மதிப்புள்ள 40 முதல் 50% வரையிலான FAQ பஞ்சு ரகம் என்றும், பெருந்தொற்று சூழ்நிலையால் வியாபாரிகள் நல்ல விலையைத் தராததால், விளைவிப்பாளர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதற்கு விரும்பலாம் என்று மதிப்பிடப்பட்டது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் இந்தியப் பருத்தி நிறுவனத்தின் பருத்திக் கொள்முதல் 34 மையங்களில் நடக்கிறது.  6900 பேல்களுக்கு சமமான 36,600 குவிண்டால் பருத்திப்பஞ்சு , பொதுமுடக்க சமயத்தில் மகாராஷ்டிராவில் கொள்முதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!