தமிழ்வழி சான்றிதழ் தர மறுத்த தலைமை ஆசிரியர் – மாணவர்கள் பதற்றம்!
தமிழகத்தில் அரசு வேலையின் காரணமாக தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வாங்க சென்ற மாணவனிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் பள்ளி தலைமை ஆசிரியர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் வழிச்சான்றிதழ்:
தமிழகத்தில் அரசுப் பணி கிடைப்பது என்பது சாதாரணம் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதிலும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை கிடைப்பது என்பதே அரிதான ஒன்று தான். இத்தகைய நிலையை போக்குவதற்காகவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் வழியிலேயே தங்களது படிப்பை முடித்தவர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்குகிறது. இத்தகைய ஒதுக்கீடு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறையில் இருந்தது. தற்போது அரசு பணிக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் விதமாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் பெரும்பாலானோர் விண்ணப்பிக்கின்றனர்.
ITI மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு – தொழிற்பயிற்சி நிலையத்துணை இயக்குனர் அறிவிப்பு!
அதில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அவர்கள் பயின்ற பள்ளியில் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்று அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது. மேலும் அதற்கான படிவத்தையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை TNUSRB வெளியிட்டது. இதனை தொடர்ந்து எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு போன்றவை ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த அக்-6 ம் தேதி தேர்வுகள் முடிவடைந்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
அதனை தொடர்ந்து TNUSRB தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை புதிய படிவத்தில் பூர்த்தி செய்து அக்-31ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான புதிய படிவம் TNUSRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு சென்று PSTM சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வருகின்றனர். பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் PSTM சான்றிதழ் கையொப்பமிட 100 ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. மேலும் அவ்வாறு லஞ்சம் குடுக்க மறுத்ததால் கையொப்பமிட முடியாது என்று தகாத முறையில் பேசியுள்ளார். தலைமை ஆசிரியரின் இத்தகைய செயல் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.