தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை!

0
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை!
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை!
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை!

தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கால அட்டவணை பற்றிய முழு விவரத்தையும் இப்பதிவில் காணலாம்.

கால அட்டவணை வெளியீடு:

தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின் பள்ளி கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. மேலும் கொரோனா 3வது தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 100% மாணவர்களின் வருகை பதிவுக்கு பின் மதிய உணவு திட்டம் துவக்கம் – அரசு தகவல்!

அதன்படி, கலந்தாய்வு நடக்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மற்றும் பொது இட மாறுதலுக்கான கலந்தாய்வு குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய கலந்தாய்வு கால அட்டவணையை தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டார்.அதன்படி, LKG, UKG பணியிடங்களில் இருந்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நிரவல் (ஒன்றியத்துக்குள்)பிப்.23 கலந்தாய்வு நடக்க உள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு( கல்வி மாவட்டத்திற்குள்) பிப் 24-ம் தேதி முற்பகல் அன்று கலந்தாய்வு நடக்க உள்ளது.

Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இதனை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு( வருவாய் மாவட்டத்திற்குள்) பிப் 24ம் தேதி பிற்பகல் கலந்தாய்வு நடைபெற உள்ளன. இந்த வகையில் இடைநிலை ஆசிரியர்கள் பொதுமாறுதல்( ஒன்றியத்துக்குள்) கலந்தாய்வு பிப் 25ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் பொது மாறுதல்(வருவாய் மாவட்டத்திற்குள்) பிப் 25ம் தேதி பிற்பகல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) பிப் 28ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பொதுமாறுதல் ( மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கும் இதுகுறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here