கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய சென்னை வாசிகள்

0
கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய சென்னை வாசிகள்
கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய சென்னை வாசிகள்

கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய சென்னை வாசிகள்

வேகமாக பரவி வரும் கொரோனாவால் மக்களுக்கு நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 31ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சென்னையில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருப்பதாகவும், தங்கள் கிராமங்களில் அதுபோன்ற சூழ்நிலை இல்லை எனவும் கோயம்பேட்டில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூறினர்.கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்து வெளிமாவட்டத்திற்கு செல்லும் பயணிகள், அரசு பேருந்துகள் வழக்கத்தை விட குறைவாகவே இயக்கப்படுவதாக கூறுகின்றனர். இந்தச் சூழலை பயன்படுத்தி கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

என்னதான் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினாலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே கொரோனாவிருந்து பாதுகாத்து கொள்ள உகந்த வழியாகும்.எனவே பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here