கொரோனாவினால் ஏற்பட்ட இயல்பு வாழ்க்கை பாதிப்பு  எப்போது திரும்பும் ?

0
கொரோனாவினால் ஏற்பட்ட இயல்பு வாழ்க்கை பாதிப்பு  எப்போது திரும்பும் ?
கொரோனாவினால் ஏற்பட்ட இயல்பு வாழ்க்கை பாதிப்பு  எப்போது திரும்பும் ?

கொரோனாவினால் ஏற்பட்ட இயல்பு வாழ்க்கை பாதிப்பு  எப்போது திரும்பும் ?

பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்கும் உலக நாடுகளிடையே கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகநாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து இந்திய மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 415 பேர் பாதிக்கப்பட்டு நிலையில் உள்ளனர். இப்பாதிப்பினை தடுக்க பல்வேறு அரசு தேர்வுகளும் ,பள்ளி பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் 82 மாவட்டங்கள் முடக்கப்பட்டு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில், தமிழகத்தில் நாளை மாலை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அலுவலகங்களுக்குள் செல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என கேள்விகள் நம்மிடையே எழும்புகிறது.

பிரிட்டனில் இந்தத் தொற்றுநோய் பரவுதலுக்கு எதிரான நடவடிக்கைகள் அடுத்த 12 வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் இருந்து கொரோனா வைரஸை பொட்டலம் கட்டி அனுப்பிவிடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த மூன்று மாதங்களில், இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், எப்போது முழுமையாக சரியாகும் என்பது புரியாத புதிர் இதன் தாக்கம் முழுமையாக மறைவதற்கு நீண்டகாலம் ஆகலாம் – ஆண்டு கணக்கில்கூட ஆகலாம்.

எனவே மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பொது இடங்களுக்கு செல்லாமல் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக தங்களை பாதுகாத்து கொண்டு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்த்திகளை தரும் உணவு பொருட்களையம் உட்க்கொண்டு வந்தால் இந்நோய் பாதிப்பில் இருந்து நாம் விரைவில் விடு படலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!