கொரோனாவை விரட்ட மருந்து ரெடி !!!

0
கொரோனாவை விரட்ட மருந்து ரெடி !!!
கொரோனாவை விரட்ட மருந்து ரெடி !!!

கொரோனாவை விரட்ட மருந்து ரெடி !!!

உ லகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் விடிவு காலம் எப்பொழுது தான் வரும் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் பல வல்லுநர்கள் மும்மரமாக இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவை ரெடிம்சிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக மூன்றவாது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கிலியட் நிறுவனம்:

கலிபோர்னியாவில் இருக்கும் கிலியட் நிறுவனம் விடுத்து இருக்கும் செய்தியில், ”கொரோனா நோயாளிகளுக்கு முதல் ஐந்து நாட்கள் வைரஸுக்கு எதிரான ரெடிம்விசிர் மருந்து கொடுக்கப்பட்டது. நல்ல பலன் அளித்தது. இரண்டு வாரங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிப் பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ரெடிம்சிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது. மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

பக்க விளைவுகள் ஏற்படுமா???

ரெடிம்சிவிர் மருந்து நல்ல பலனை அளிக்கிறது என்று தெரிவித்து இருப்பதாக கிலியட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு குறித்த தகவல்களை தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய் நிறுவனமே தெரிவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ரெடிம்சிவிர் மருந்து பாதுகாப்பானது, பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று இதுவரை எந்த உலக மருந்து நிறுவனங்களும் தெரிவிக்கவில்லை.

ஸ்டான்ட்போர்டு பல்கலைக் கழகம்

ஸ்டான்ட்போர்டு பல்கலைக் கழகம் மருத்துவத்துறையின் அருணா சுப்ரமணியன் அளித்து இருக்கும் பேட்டியில், ”ரெடிம்சிவிர் மருந்தை ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டவருக்கு என்ன பலன் கிடைத்ததோ அதே பலன்தான் பத்து நாட்கள் ரெடிம்சிவிர் மருந்து எடுத்துக் கொண்டவருக்கும் பலன்தான் கிடைத்துள்ளது.

இன்னும் கூடுதல் தகவல்கள் இந்த மருந்து தொடர்பாக தேவைப்படுகிறது. இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்த உட்கொண்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்கிறபட்சத்தில், இந்த மருந்து மிகவும் சாதகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

காப்பு உரிமை:

இந்த மருந்துக்கான காப்பு உரிமையை சீனா கோரியுள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சீனாவும் செயல்பட்டு வருவதால், காப்பு உரிமையை கோரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!