நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – எச்சரிக்கை விடுத்துள்ள ஐநா!

0
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - எச்சரிக்கை விடுத்துள்ள ஐநா!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - எச்சரிக்கை விடுத்துள்ள ஐநா!நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - எச்சரிக்கை விடுத்துள்ள ஐநா!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – எச்சரிக்கை விடுத்துள்ள ஐநா!

கொரோனா பல நாடுகளில் பெருகி வருவதால் கூடிய விரைவிலேயே இலங்கை போன்று பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியால் சந்திக்க நேரிடலாம் என ஐநா வளர்ச்சி திட்டத்தின் நிர்வாகி எச்சரித்துள்ளார்.

ஐநா எச்சரிக்கை:

எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இலங்கை தற்போது கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு வேளை உணவிற்கு கூட பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், இலங்கை அரசுக்கு உதவ எந்த நாடும் முன்வரவில்லை. அதாவது, பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் இறக்குமதியை இலங்கை அரசு நம்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மற்ற நாடுகளில் இருந்து இலங்கை அரசு வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியையும் இந்த மாதம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பொதுவாகவே, ஒரு நாடு கடனை திருப்பி கொடுக்காவிட்டால் அந்த நாட்டால் பிற நாடுகளில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாது என ஐநா சபை அறிவித்துள்ளது. இந்த சமயத்தில் இலங்கைக்கு பிற நாடுகளில் இருந்து பெட்ரோல், டீசல் கிடைக்காமல் போனால் மக்கள் மிகவும் இழிவான நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டுமே கிட்டதட்ட 82.80 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் திட்டம் – அறிவிப்பு வெளியீடு!

இதனிடையே, பண வீக்கத்தின் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதுவரை 7.10 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும் பல நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இலங்கையை போன்றே பல நாடுகள் மிக பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here