தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு..!

1
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது. அதில் பெரும்பாலானோர் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!

கண்காணிப்பு தீவிரம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இது குறித்த விபரங்களை தெரிவித்த பீலா ராஜேஷ், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் விபரங்களை கண்டறிவது கடினமான பணியாக உள்ளது. மேலும் இதுவரை 515 பேரில் முகவரிகள் கண்டறியப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனவால் PF பணத்தை எடுத்துக் கொள்ள புதிய சலுகை

ஆனால் 1131 பேர் தமிழகத்தில் இருந்து மட்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகம் வந்தவர்கள் தானாக முன்வந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here