கொரோனா வைரஸ் தொற்று காரணமாக – நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து..!

0
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக – நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து..!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக – நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக – நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து..!

டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

மின்னல் வேகத்தில் கொரோனா..!

நேற்று இங்கிலாந்தில் ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் 500 க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தது. கொரோனா தொற்று இங்கிலாந்திலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் நடத்தவோ அல்லது தள்ளிவைக்கப்படவோ சாத்தியமில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

வெளியூர் செல்வதற்கு தமிழக அரசின் ‘Covid 19 e-Pass’ பெறுவது எப்படி தெரியுமா..? முழு விபரங்கள் இதோ..!

கொரோனாவால் – போட்டி ரத்து..!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர். 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது.

தற்போது வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஏப்ரல் 5 மகாசக்தியை வெளிப்படுத்துவோம் – கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடியின் உரை..!

பழமைவாய்ந்த போட்டி..!

நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2 வது உலகப்போரின் போது ரத்து செய்யப்பட்டது. அதாவது 1945ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டனை நடத்த முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!