புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்தா..? சுகாதார அமைப்பு பதில்..!

0

புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்தா..? சுகாதார அமைப்பு பதில்..!

புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாக அதிகமாகவே வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைப்பு பதில்..!

புகை பிடிப்பவர்கள் விரல்களில் சிகரெட்டுகளை வைத்துக்கொண்டு வாய் பகுதிக்கு கொண்டு செல்வதால், வைரஸ் கையிலிருந்தால் வாய்க்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் புகை பிடிப்பவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் நோய் இருக்கலாம் அல்லது அதன் செயல்திறன் குறைந்து இருக்கலாம். இது நோய்க்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும்” எனக் கூறியுள்ளது.

சுவாசப்பிரிவு மருத்துவர்கள் அறிக்கை..!

புகை பிடிப்பவர்களின் சுவாச மண்டலத்தில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது மிகவும் ஆபத்தானதாகவே இருக்கும். எப்போதாவதுதான் புகைப்பேன் என்பவர்களும் இதில் தப்பிவிட முடியாது.

எந்தெந்த வங்கிகள் 3 மாத EMI தொகையை தள்ளிவைத்து இருக்கின்றன..? முழு விபரங்கள் இதோ..!

ஏனென்றால், அவர்களுடைய சுவாச மண்டலும் பாதிப்பை சந்தித்திருக்கும். உங்கள் சுவாச மண்டலம் ஏற்கனவே சேதமாகியிருக்கும்போது கொரோனா வைரஸ் ஆபத்து என்பது தொடர்ச்சியாக அல்லது அவ்வப்போது புகைப்பவர்களுக்கு சமமாகவே உள்ளது. புகை பிடிப்பவர்கள் அதனை கைவிட இதுவே சிறந்த நேரமாகும். குறைந்தபட்சம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வரையிலாவது அப்பழக்கத்தை நிறுத்துங்கள்” என இந்திய சுவாசப்பிரிவு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வில் தகவல்..!

கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கிய பிப்ரவரியில் “நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன்” இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில், சீனாவில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 1099 கொரோனா தொற்று நோயாளிகளில் 173 பேருக்கு மிகவும் கடுமையான பாதிப்பு இருந்தது. அவர்களில் 16.9 சதவீதம் பேர் தற்போதைய புகை பிடிப்பவர்கள் என்றும், 5.2 சதவீதம் பேர் புகை பிடித்தலை கைவிட்டவர்கள். இரண்டாவதாக கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட நோயாளிகளில் 11.8 சதவீதம் பேர் தற்போதைய புகை பிடிப்பார்கள் என்றும் 1.3 சதவீதம் பேர் புகைபிடிப்பதை கைவிட்டவர்கள்.

அமெரிக்காவின் மயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் ஜே. டெய்லர் ஹேஸ் பேசுகையில், “சீனாவில் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் புகை பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர்” எனக் கூறுகிறார்.

செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!