தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - CEO வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - CEO வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து திருச்சிராப்பள்ளி முதன்மை கல்வி அலுவலர் (CEO) அவர்கள் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கொரோனா தடுப்பூசி:

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு வித கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றில் ஒன்று தான் தடுப்பூசி செலுத்துவது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அரசு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் கண்டிப்பான முறையில் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CEO அறிக்கை :

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்த நிலையில் அநேகமானவர்கள் இன்னும் அதனை செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அவர்களுக்கு இரண்டாம் அலையின் தாக்கத்தினை எடுத்துரைக்க வேண்டும் என முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பரவி வரும் இந்த அலையின் தாக்கத்தினை எடுத்துரைத்து 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசியினை எடுத்துக் கொள்வது குறித்து அறிவுறுத்துதல் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவர்க்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை இன்று (30.04.2021) மாலைக்குள் பதிவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here