தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO வெளியீடு!

0
தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - CEO வெளியீடு!
தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - CEO வெளியீடு!
தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO வெளியீடு!

திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வரும் ஜூன் 20 ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பூசி விவரம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்று அரசு தெரிவித்துள்ளது. அதனால் தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அரசு வலியுறுத்து உள்ளது. அரசுப் பணியாளர்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அரசு பல வழிகளை மேற்கொண்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் , அலுவலர்கள் / அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் ஜூன் 20ம் தேதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருத்தல் வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சான்றிதழ் நகலை பெற்று ஒன்றியத்திற்குரிய அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் அதற்கான காரணத்தை தகுந்த ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் ஜூன் 7 முதல் கடைகள் திறக்க அனுமதி – முழு தளர்வுகளின் விபரம்!

இது குறித்த தகவலை அறிக்கையில் உள்ள இணைப்பு படிவத்தில் பூர்த்தி செய்து வரும் ஜூன் 19ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!