கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளம் – தமிழ் மொழி புறக்கணிப்பு !!

1
கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளம் - தமிழ் மொழி புறக்கணிப்பு !!
கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளம் - தமிழ் மொழி புறக்கணிப்பு !!
கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளம் – தமிழ் மொழி புறக்கணிப்பு !!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்யப்படும் அரசின் கோவின் என்ற இணைய பக்கத்தில் 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மொழி புறக்கணிப்பு:

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க தற்போது ஒரே தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. 18 வயது முதல் அனைவரும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நோய் தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அரசும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது. 45 வயது மேற்பட்டோருக்கு முதலில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ssc

தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பாக கோவின் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ள இருப்பவர்கள் முன்னதாகவே இந்த இணையத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து கொண்டு பிறகு மையங்களுக்கு செல்லலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. மேலும் பல மாநில மொழிகளை சேர்க்கும் படி பலரும் வலியுறுத்தி வந்தனர்.

தமிழக அரசு சுகாதார நிலைய வேலைவாய்ப்பு தேர்வு தள்ளிவைப்பு – அரசு அறிவிப்பு!!

இதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிராந்திய மொழிகளில், தமிழ், கன்னடம்,மலையாளம் போன்ற அனைத்து மாநில மொழிகளிலும், இந்த இணையதளம் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோவின் என்ற இணைய பக்கத்தில், 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் இணையம் வாயிலாக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் ஏன் இதனை தூக்கி பிடிக்கிறார் கள். தனியாக இணையதளம் உடனே துவக்கி அதில் இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளை இணைக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!