ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாகவும், மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்த வைக்கும் முயற்சியாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ரேஷன் பொருட்கள்:

தமிழக அரசு சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் தகுதியுடையோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையில் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் சுகாதாரத்துறை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அளித்தது. இதன் விளைவாக மக்கள் தடுப்பூசிகளை செலுத்த முன் வந்தனர். இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டால் தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய ஆரம்பித்து.

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தற்போது 1000 த்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்னும் பலர் முதல் டோஸ் தடுப்பூசியையும், கால அவகாசம் முடிந்தும் 2ம் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கில் தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. அதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகளை செலுத்த அரசு அறிவுறுத்தி வருகிறது.

2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தடுப்பூசி செலுத்தாத மக்களை தடுப்பூசி செலுத்த வைக்கும் முயற்சியாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க உத்தரவிடுவது குறித்து ஆலோசனை நடக்கிறது. ஒரு வாரம் அவகாசம் அளித்து திட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் அரசின் உத்தரவுகளை பின்பற்றி பாதுகாப்பாக இருந்தால் ஒமைக்ரான் வைரஸில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here