18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி – டெல்லியில் துவக்கம்!!

0
18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி - டெல்லியில் துவக்கம்!!
18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி - டெல்லியில் துவக்கம்!!
18+ வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி – டெல்லியில் துவக்கம்!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது.

தடுப்பூசி பணிகள்

நாடு முழுவதும் எவ்வளவு அதிகமாக கொரோனா பரவி வருகிறதோ, அந்த அளவிற்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. கொரோனா உயிர்கொல்லி நோய்க்கு சரியான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில், மருத்துவர்கள் மற்றும் மக்களின் ஒரே நம்பிக்கையாக இருந்து வருவது இந்த தடுப்பூசிகள் தான். அதனால் இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதில் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சர்வதேச விமானங்களுக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!! 

முன்னதாக, இந்தியாவில் இரண்டு கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், மே 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைக்காததால் அறிவிக்கப்பட்டபடி தடுப்பூசிகள் போடப்படாது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்னதாக தெரிவித்திருந்தார். தவிர டெல்லியில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதனால் தினமும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதுடன், ஆச்சிஜன் குறைபாடு காரணமாக பல நோயாளிகள் இறக்கின்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் 18 வயது முதல் 45 வயது வரை வரை உள்ளவர்களுக்கு கொரோனா மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று (மே 3) துவங்கியது. இதனடிப்படையில் 77 பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 90 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here