கோயிலுக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் – மாநில அரசு அறிவிப்பு!

0
கோயிலுக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - மாநில அரசு அறிவிப்பு!
கோயிலுக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - மாநில அரசு அறிவிப்பு!
கோயிலுக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் – மாநில அரசு அறிவிப்பு!

இமாச்சல் பிரதேசத்தில் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலத்திற்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் :

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் அதிகரிக்கும் காரணத்தால் அனைத்து மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் தடுப்பூசிகளை விரைவாக செலுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு பணியாக கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசுகள் தடை விதித்து வருகின்றன. மேலும் பல்வேறு பகுதிகளில் முக்கிய வீதிகளில் செயல்பட்டு வரும் கடைகளும் மூடப்பட்டு வருகிறது.

8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து விழா காலங்களில் மாநில அரசுகள் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே கொரோனா நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் வரும் 9ம் தேதி முதல் சர்வன் அஷ்டமி நவராத்ரா பண்டிகை வர உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

TN Job “FB  Group” Join Now

எனவே முன்னெச்சரிக்கை பணியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல கொரோனா தடுப்பூசி செய்து கொண்ட சான்றிதழ் கட்டாயம். மேலும் மாநிலத்திற்குள் நுழையும் நபர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் எனவும், கோயிலுக்குள் நுழைவதற்கு பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றை காட்டினால் தான் அனுமதிக்கப்படுவார்கள் என இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!