தமிழகத்தில் வரும் 24ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

0
தமிழகத்தில் வரும் 24ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழகத்தில் வரும் 24ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழகத்தில் வரும் 24ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று மாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தார். மேலும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி முகாம்:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அச்சுறுத்தி வருகிறது, இதை தொடர்ந்து குரங்கு அம்மை என்ற புதிய வகை நோய் தற்போது மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றம் – அரசு உத்தரவு!

அந்த வகையில் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோவை விமான நிலையத்தில் ஒரு ஆர்டிபிசிஆர் மையம் தயார் நிலையில் இருக்கிறது. கேரளா-தமிழகம் இடையே பொள்ளாச்சி, வாளையாறு உள்பட 13 இடங்களில் தரைமார்க்கமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்வோரை சோதனை மையம் அமைத்து கண்காணித்து வருகிறோம். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 96 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 87 சதவீதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் முகங்களிலோ அல்லது முழங்கைக்கு கீழே கொப்புளங்கள் வந்தால் அவர்களை உடனடியாக பரிசோதிப்பது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் வரும் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளோம். அதில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை செய்ய உள்ளோம் என கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here