குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் – தவறாமல் படிங்க!!

0
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் - தவறாமல் படிங்க!!
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் - தவறாமல் படிங்க!!
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் – தவறாமல் படிங்க!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் காரணமாக பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

குழந்தைகளை தாக்கும் கொரோனா:

கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே கடந்த ஆண்டு முதல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மாநில அரசின் பல்வேறு நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மாதம் தொடங்கி 1 முதல் 4 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசியும் இல்லை.

TN Job “FB  Group” Join Now

பெரும்பாலும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக இல்லாமல் உள்ளது. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை இல்லாமல் பல குழந்தைகள் அபாய கட்டத்தில் உள்ளனர். டெல்லி, மகராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனத்துடன் கண்காணிப்பது அவசியமாக உள்ளது. இது குறித்து ஹார்வார்டு ஹெல்த் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பெரியவர்களுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பை விட சிறிய குழந்தைகளுக்கு அறிகுறிகள் வேறுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் சிலருக்கு குறைவாக கூட இருக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்:

  • பொதுவாக குழந்தைகளுக்கு சாதாரண அறிகுறிகளான சளி, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டைவலி ஏற்படலாம்.
  • தொடர்ந்து 4 அல்லது 5 நாட்களுக்கு 103 டிகிரி முதல் 104 வரை காய்ச்சல் இருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • பெற்றொர்கள் ஆக்ஸி பல்ஸ் மீட்டரை அளவை கண்காணித்து, அது குறைவாக இருந்தால் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
  • கொரோனாவின் பொதுவான அறிகுறிகள் தவிர குழந்தைகளிடம் மல்டி சிஸ்டம் எண்ணிக்கை அதிகரிக்க பரிந்துரைத்துள்ளன.
  • MIS-C – நிலை கொண்ட குழந்தைகள் இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை, தோல் அல்லது கண்கள் உள்ளிட்ட உடலின் பல்வேறு உறுப்புகளில் கடுமையான அழற்சி ஏற்படும்.
  • கடுமையான மற்றும் குளிர்ந்த நிலையில் குழந்தைகளின் நுரையீரலை பாதிக்கும் மற்றும் தீவிர நிகழ்வுகள் நிம்மோனியாவின் அறிகுறியாக சில நேரங்களில் இருக்கும்.
  • மூக்கு, சிவப்பு விரிசல் உதடுகள், முகம் மற்றும் உதடுகளில் நீல நிறம், எரிச்சல், தூக்கமின்மை, பசியின்மை போன்றவை கொரோனாவின் வேறு சில அறிகுறிகளாகும்.

குழந்தைகளுக்கான கொரோனா:

குழந்தைகளுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டால் அது பெரியவர்களுக்கு பரவுமா என்பது குறித்து சரியான விளக்கம் எதுவும் இல்லை. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அது அடுத்தவர்களுக்கு பரவாமல் பாதுகாக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

‘இந்த’ வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

குழந்தைகளுக்கு சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க கற்று தர வேண்டும். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உணவில் இருப்பது அவசியம் ஆகும். அவர்களுக்கு நல்ல சத்துள்ள உணவு வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்து தருவது நமது கடமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!