இந்தியாவில் மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமலாகுமா? அரசின் முடிவு!

0
இந்தியாவில் மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா பரவல் - ஊரடங்கு அமலாகுமா? அரசின் முடிவு!
இந்தியாவில் மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா பரவல் - ஊரடங்கு அமலாகுமா? அரசின் முடிவு!
இந்தியாவில் மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமலாகுமா? அரசின் முடிவு!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், இது நான்காம் அலை கொரோனா தாக்கம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை தடுக்க அரசு மீண்டும் நோய்தடுப்பு கட்டுப்பாடுகளை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்:

இந்தியாவில் கொரோனா நான்காம் அலை தாக்கம் தொடங்கி விட்டது. மேலும், கடந்த ஒரு மாத காலமாகவே வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் பரவக் கூடியது என்றும் எச்சரித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில், 17,073 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிலும் தமிழகம், கர்நாகா, டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அதனால் அம்மாநிலங்களில் தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் நாட்டில் மொத்தமாக 94 ,420 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று மட்டும், 21 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கூடுதலாக கொரோனா பலி எண்ணிக்கை 5,25,020 ஆக உயர்ந்துள்ளது. அதே போல நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 15,208 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,87,606 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

NABFINS நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – முழு விவரங்கள் இதோ!

இதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் மக்கள் வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாக்கவும், ஊரடங்கை தவிர்க்கவும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here