தமிழக பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்கள் – பரவல் எதிரொலி!

0
தமிழக பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்கள் - பரவல் எதிரொலி!
தமிழக பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்கள் - பரவல் எதிரொலி!
தமிழக பள்ளிகளுக்கு கொரோனா தடுப்பு அறிவுறுத்தல்கள் – பரவல் எதிரொலி!

தமிழகத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள் தோறும் பின்பற்றப்பட வேண்டிய புதிய அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா 3ம் அலைத்தொற்று ஓய்ந்து வந்ததற்கு பிறகு தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு கடந்த 13ம் தேதி முதற்கொண்டு மீண்டுமாக துவங்கி இருக்கிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், அனைத்து பள்ளிகளும் முறையான கொரோனா தடுப்பு நடத்தையை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களிலும், முகக்கவசங்களை அணிவது வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த ஊடக அறிக்கைகளின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் முகக்கவசங்களை அணியும் விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் சரியான நோய்த்தடுப்பு நடத்தை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதன் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துமாறு அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை கண்டறிய கூடுதலான ஆய்வகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிலும் பரிசோதனையை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த ஜூன் 16ம் தேதியன்று 552 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், கொரோனாவால் இதுவரை இறப்பு நிகழ்வுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளால் வழங்கப்படும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here