தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா பரவல் – சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா பரவல் - சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா பரவல் - சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா பரவல் – சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் முழு ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளதோ என பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர்.

தீவிரமடையும் கொரோனா:

கடந்த 2 வருடங்களாக உலகமே கொரோனா நோயால் தத்தளித்து வருகின்றது. இந்தியா உட்பட பல நாடுகள் தற்போது இந்த பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஆனால் தற்போது மீண்டும் நாட்டின் 5 மாநிலங்களில்(டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம் ) அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று தலைதூக்கி உள்ளது. குறிப்பாக 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் நேற்று சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியது, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வரும் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் முகாம்கள் நடைபெற உள்ளது. அதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் 40% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – இதற்காக தான்? மாநில அரசு முடிவு!

கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த நிலையில், சற்று அதிகரித்து காணப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. BA4, BA5 வகை உருமாறிய கொரோனா புதிதாக பதிவாவது, 5ஆவது அலை தொடங்கியது என்பதனை சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பாசிட்டிவ் என்று வந்தாலும் கவலை இல்லை. மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!