ஜூன் 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – முக்கிய அறிவிப்பு!

0
ஜூன் 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு - முக்கிய அறிவிப்பு!
ஜூன் 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு - முக்கிய அறிவிப்பு!
ஜூன் 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு – முக்கிய அறிவிப்பு!

சீனாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஷாங்காய் மாகாணத்தில் ஜூன் 1 முதல் தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருந்தகங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மையம் உள்ளிட்டவற்றை முதலில் திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய அறிவிப்பு:

உலகம் முழுவதும் அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று, அதன் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகியது. அந்த வகையில் ஷாங்காய் மாகாணத்தில் சுமார் 6 வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. கொரோனாவின் முதல் அலையின் போது, சீன அரசு பூஜ்ய கொரோனா கொள்கை என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திடீர் உத்தரவு பிறப்பிப்பு!

அதன் அடிப்படையில் தற்போது, தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. அந்த திட்டங்கள் பலன் அளித்த காரணத்தால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தது. சர்வதேச பயணத்தை தடை செய்வது, பொருளாதாரம் மற்றும் வணிக ரீதியான தொடர்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால், சீன அரசின் நடவடிக்கைக்கு சில கண்டனங்களும் எழுந்தன. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சீன அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் ஷாங்காய் மாகாணத்தின் 15 மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், ஊரடங்கை தளர்த்துவதற்கு மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஷாங்காய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் உட்பட போக்குவரத்து சேவைகளுக்கு தற்போது படிப்படியாக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டாலும் ஷாங்காய் நகர மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது உள்ளது. அந்த வகையில் இளைஞர் முதல் வயதானவர் வரையிலான ரயில் பயணிகள் நோய் பாதுகாப்பு உடை அணிந்து, ஷாங்காய் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் படியான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைந்தாலும் அதன் அச்சம் இன்னும் மக்களிடையே குறையவில்லை என்பது இந்த புகைப்படத்தின் மூலம் தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here