இன்று முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
சீனாவில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு அச்சம் காரணமாக சியான் மாகாணத்தில் இன்று (டிச.23) முதல் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட சீனாவில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. இதன் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட வடக்கு சீன நகரமான சியானில் கடுமையான முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வளர்ந்து வரும் ஒமிக்ரான் வைரஸின் தாக்கத்திற்கு மத்தியில் அரசு பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் மறக்க முடியாத தருணங்கள் – பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை வென்ற இந்தியா!
இப்போது பெய்ஜிங் மாகாணத்தில் வரும் 2022 பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சீன அரசு தயாராகி வருவதால், பல நகரங்களில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவின் சியான் நகரில் நேற்று (டிச.22) ஒரு நாளில் மட்டும் 52 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் எண்ணிக்கை143 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது இந்நகரில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளின் படி, இன்று (டிச.23) முதல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு வீட்டு உறுப்பினர் மட்டுமே பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லலாம்.
மற்ற அனைவரும் இந்த பொது முடக்க காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காரணமாக வீட்டை விட்டு வெளியேற விரும்புவோர் சிறப்பு சூழ்நிலைகளுக்கான சான்றுகளை ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சியான் நகரத்தில், நீண்ட தூர பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன. மேலும் இந்நகருக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைகளில் நோய் கட்டுப்பாட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
தவிர சியான் நகரின் முக்கிய விமான நிலையத்திலிருந்து 85 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நகரின் உள்ளே, பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகள் திறன் குறைக்கப்பட்டுள்ளது. அது போல பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசியமான வணிகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், கடைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை தவிர பொது வசதிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் அரசாங்கம் மக்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு முதலாளிகளை வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
வெளிப்புற பூங்காக்களில் பெரிய அளவிலான கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா இராணுவத்தை உள்ளடக்கிய அருங்காட்சியகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவின் தெற்கு நகரமான டோங்சிங் பகுதியில், கடந்த டிச.21ம் தேதியன்று 200,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாக்கப்பட்ட பின்னர் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.