
தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு மத்தியில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்!
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே டெங்கு, இன்புளுயன்சா போன்ற பருவ காய்ச்சல்கள் அதிகம் பரவி வருகிறது. இந்த நிலையில் இறங்கு முகத்தில் இருந்து வந்த கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்த்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு சுகாதாரத்துறையின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 2000 இடங்களில் 37 – வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போல மற்ற மாவட்டங்களுகளிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசிகளின் பலனாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. ஒரு வழியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து விட்டோம் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் கடந்த ஒரு வாரமாகவே தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. அதாவது சென்னையில் மட்டும் பாதிப்பு 100 ஐ கடந்துள்ளது. இதற்கு மத்தியில் அடுத்த தாக்குதலாக பருவநிலை மாற்றத்தால் டெங்கு, இன்புளுயன்சா, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்கள் அதிகம் குழந்தைகளை தாக்கி வருகிறது.
சென்னையில் ஸ்தம்பித்து நின்ற ஆன்லைன் டெலிவரி.. Swiggy ஊழியர்கள் திடீர் போராட்டம்!
Exams Daily Mobile App Download
மருத்துவமனைகள் எங்கும் காய்ச்சல் வார்டுகள் நிரம்பி வழிந்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல டெங்குவால் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500 ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து பரவி பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்