கொரோனாவை விரட்டும் மூன்று கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

0
கொரோனாவை விரட்டும் மூன்று கட்டுப்பாடுகள் - மத்திய அரசு அறிவிப்பு!!
கொரோனாவை விரட்டும் மூன்று கட்டுப்பாடுகள் - மத்திய அரசு அறிவிப்பு!!
கொரோனாவை விரட்டும் மூன்று கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என மத்திய அரசு முக்கிய கட்டுப்பாடு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒரே நாளில் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவை எவ்வாறு தவிர்ப்பது என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவனின் அலுவலகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

அதன்படி ஒருவர் தடுப்பூசி போட்டாலும், போடாமல் இருந்தாலும் அவர் கொரோனா பரவலில் இருந்து தற்காத்து கொள்ள கட்டாயம் முகக்கவசம் அவசியமாகும், மேலும் சமூக இடைவெளி, காற்றோட்டம் என அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் ஏரோசெல்கள் (நீர்த்துளிகள்) 10 மீட்டர் வரை பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் இருக்கும் அறை காற்றோட்டமாக இருக்க வேண்டும். அதாவது அறையில் உள்ளே உள்ள காற்று வெளியே உள்ள காற்று உள்ளே வரும்படி இருக்க வேண்டும். மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாக செய்தால் மட்டுமே கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுத்தமான காற்று வேறொருவருக்கு நேரடியாக செல்லும் இடத்தில் மின்விசிறி இருக்கக்கூடாது என்பதால் மின்விசிறியின் இடமும் இதில் முக்கியமான ஒன்றாக உள்ளது. அலுவலக அறைகளில் மின்விசிறிகளுடன். எக்ஸாஸ்ட் பேன்களை இயக்க வேண்டும் என்றும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அகலமாக திறந்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் போது வைரஸ் துகள்களை நீர்த்துப்போக செய்யும்.

கேரள முதல்வராக மீண்டும் பினராயி விஜயன் – இன்று பதவியேற்பு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின மூக்கு மற்றும் வாயில் இருந்து வரும் நீர்த்துளிகள், ஏரோசோல்களின் வடிவத்தில் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக அறிகுறிகள் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் கொரோனாவை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இதில் இருந்து நம்மை காத்து கொள்ள இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும். அல்லது N95 முகக்கவசங்களை அணிய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!