இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் கொரோனா தொற்று – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா பெருந்தொற்று குழந்தைகளை தாக்கும் போது அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை, மருந்துகள் உள்ளிட்டவற்றை எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு வீதமானது ஒரு லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா விரைவில் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘ஜன்தன் வங்கிக்கணக்கு’ தொடங்கும் எளிய வழிமுறைகள்!
அதாவது மூன்றாம் அலை குழந்தைகளை அதிகளவு தாக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். அதன் படி கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் போது சிகிச்சை, பராமரிப்பு, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தவிர கொரோனா பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஐவர்மெக்டின், ஹைட்ராக்சிகுளோரோகுயின், பேவிபிராவிர், டாக்சிசைக்ளின், அஜித்ரோமைசின் போன்ற மருந்துகள் மூலம் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரை மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட நெறிமுறைகளின் படி,
- கொரோனா 2 ஆம் அலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்ட தினசரி பாதிப்புகளின் அடிப்படையில், குழந்தைகள் பராமரிப்புக்கான கூடுதல் படுக்கைகளை உருவாக்க வேண்டும்.
- நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கொரோனா பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும்.
- இதற்காக சிறப்பு உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- மேலும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
- குழந்தைகளுக்கு என மருத்துவமனைகளில் தனி ஏற்பாடு அதாவது தனி படுக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- தொற்று பாதித்த குழந்தைகளுடன் பெற்றோர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்.
சிகிச்சைக்கு பின் கொரோனா நெகட்டிவ் வரும் குழந்தைகள், பன்னமைப்பு அழற்சி நோய்க்குறி உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவமனைகளில் பராமரிப்பு அளிக்க வேண்டும். - அவர்களுக்கென தீவிர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- அறிகுறிகள் இல்லாத லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை வீட்டில் வைத்து பெற்றோர்களே பராமரிக்கலாம்.
- அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாரசிடமோல் மாத்திரைகளைத் தருவது, சுவாச பிரச்சனை, ஆக்சிஜன் செறிவு உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்கும் போது, அதில் ஆஷா மற்றும் MPH பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.