நர்சிங் கல்லூரி தற்காலிகமாக மூடல் – பேராசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

0
நர்சிங் கல்லூரி தற்காலிகமாக மூடல் - பேராசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
நர்சிங் கல்லூரி தற்காலிகமாக மூடல் - பேராசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
நர்சிங் கல்லூரி தற்காலிகமாக மூடல் – பேராசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

புதுவையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் நர்சிங் கல்லூரியில் 3 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கல்லூரி மூடல்:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் பாடங்கள் மாணவர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் தேதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கட்டுப்பாடுகள் – முதல்வர் விளக்கம்!

புதுவையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிமற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. சுழற்சி முறையில் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் இரண்டு டோஸ் செலுத்திய பின்பு மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் போன்ற பல்வேறு நிபந்தனைகளின் பேரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது – 5 லட்சம் பரிசுத்தொகை!

தற்போது புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கல்லூரியை தற்காலிகமாக மூடியுள்ளனர். இது அந்த பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!