தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – கல்வித்துறை ஆலோசனை!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று - கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று - கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – கல்வித்துறை ஆலோசனை!

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவது குறித்து செப்.14ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கல்வித்துறை ஆலோசனை:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. நோய் பரவும் விகிதம் மற்றும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் 3வது அலை தொடக்கம்? ஒரே நாளில் 43,263 பேருக்கு தொற்று! 338 பேர் பலி!

இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு – இன்றைய விற்பனை!

இருப்பினும் மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக செப்.14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். DPI வளாகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், இயக்குநர்கள், CEO-க்கள், DEO-க்கள் பங்கு பெறுகின்றனர். இதில் கொரோனா பரிசோதனை, பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!