தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை – அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

0
தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை - அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை - அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை – அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் முன்னெச்சரிக்கையாக கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல்:

தமிழகத்தில் கடைசியாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றால் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஆக அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்புப் பணிகளை மேற்கொண்டது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அறிவித்தார்.

நாட்டில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமரின் அதிரடி முடிவு!

மேலும் திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்றதால் பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. தற்போது அடுத்த பேரிடராக XE வகை வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. மேலும் ஜூன் மாதம் நான்காவது அலை ஏற்படும் என்று ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளை மீண்டும் தடுப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

நாளை முதல்வர் முக்கிய உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அலைகளும் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஒரு வார காலத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் இதுவரை 2,015 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here