நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? இன்று பிரதமர் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

0
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? இன்று பிரதமர் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? இன்று பிரதமர் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? இன்று பிரதமர் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

நாடு முழுவதும் இதுவரை 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் நிலவும் கோவிட்-19 நிலைமையை மதிப்பாய்வு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

பொது ஊரடங்கு:

நாட்டில் ஒட்டுமொத்த கோவிட் -19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,758,481 ஆக உள்ளது. இதில் 4,78,325 பேர் கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் மொத்தம் 78,190 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை எடுத்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நாடு தழுவிய தினசரி எண்ணிக்கை 8,000-க்கு கீழே உள்ளது. கடந்த செவ்வாயன்று, மத்திய சுகாதார அமைச்சகம் கோவிட்-19 தொற்றின் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை எச்சரித்தது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை – ஆசிரியர் கழகம் நற்செய்தி!

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் ஓமைக்ரான் வகை தொற்று டெல்டா மாறுபாட்டை விட மூன்று மடங்கு அதிகமாக பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் வகை தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி டெல்லியில் 57, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (54), தெலங்கானா (24), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15), குஜராத் (14) ஆகிய மாநிலங்களில் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கோவிட்-19 தொற்று ஆய்வு செய்து இரவு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை? ஊழியர்கள் முக்கிய கோரிக்கை!

இதனால் வியாழக்கிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோவிட் -19 கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் வகை தொற்றை மதிப்பாய்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், நிலைமையை பொறுத்து முடிவு செய்ய அறிவுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒரு வாரத்தில் அனைத்து சோதனைகளிலும் 10% க்கும் அதிகமானவை நேர்மறையாக மாறினால் அல்லது மருத்துவமனை படுக்கைகளின் மொத்த எண்ணிக்கையில் 40% க்கும் அதிகமானால் பெரிய கூட்டங்களைத் தடைசெய்யவும், உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் அதிக பரிசோதனை, அவசர முடிவுகள் கடுமையான மற்றும் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கை தேவை என்றும் மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here