மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் – மாநில அரசு வெளியீடு!

0
மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் - மாநில அரசு வெளியீடு!
மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் - மாநில அரசு வெளியீடு!
மூன்றடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் – மாநில அரசு வெளியீடு!

கொரோனா தொற்று பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப மைக்ரோ கண்டெய்ன்மெண்ட் மண்டலங்களை உருவாக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கேரளா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2 ஆம் அலை பரவல் மீண்டுமாக தீவிரமடைய துவங்கியது. இதனால் அம்மாநிலத்தில் தினசரி 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த புதிய பாதிப்புகளை சுதாரித்து கொண்ட மாநில அரசு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. இதன் மூலம் நோய் பரவலானது சமீப காலமாக குறைந்து வரும் சூழலில், புதிய பாதிப்புகள் ஒரு நாளைக்கு 10 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் கேரளா மாநிலத்தில் நடைமுறையில் இருப்பினும் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு வீடுகளுக்கான மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு – பட்ஜெட் தாக்கல்!

இந்நிலையில் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த மும்மடங்கு ஊரடங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு திருத்தியுள்ளது. அந்த வகையில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை கணக்கில் கொண்டு மைக்ரோ கண்டெய்ன்ட் மண்டலங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று (ஆகஸ்ட் 12) முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த கேரளா அரசின் புதிய உத்தரவின்படி,

  • கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய பகுதி கூட மைக்ரோ கண்டெய்ன்மெண்ட் என அடையாளம் காணப்படும்.
  • அதாவது 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டுக் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த பகுதிகள் மைக்ரோ கண்டெய்ன்மெண்ட் மண்டலமாக பட்டியலிடப்படும்.
  • மேலும் 100 பேர் வசிக்கும் பகுதிகளில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து குடியிருப்பு காலனிகள், வணிக வளாகங்கள், தொழில்துறை நிறுவனங்கள், சந்தைகள், மீன் கடைகள் உட்பட மற்ற அனைத்தும் மைக்ரோ கண்டெய்ன்மென்ட் மண்டலமாக அடையாளம் காணப்படும்.
  • 100 மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், இந்தப் பகுதி மைக்ரோ கண்டெய்ன்ட் மண்டலமாக அடையாளம் காணப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
  • கூடுதலாக வீதிகளின் எண்ணிக்கை மற்றும் நெரிசலான பகுதிகள் உட்பட எந்தவொரு சிறிய பகுதியும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here