கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – பிரதமர் முக்கிய அறிவிப்பு!

0
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் - பிரதமர் முக்கிய அறிவிப்பு!
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் - பிரதமர் முக்கிய அறிவிப்பு!
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – பிரதமர் முக்கிய அறிவிப்பு!

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து நிலைமை சீராகி வருவதால் வரும் வாரம் முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

கட்டுப்பாடுகள் நீக்கம்:

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளும் கொரோனாவால் கடும் சவாலை சந்தித்தது. இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவ தொடங்கியது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

CBSE 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!

அதன் தொடர்ச்சியாக B A2 வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பாதிப்புகள் குறைந்து வருகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் உடம்பில் நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அரசு வரும் வாரம் முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவு செய்துள்ளது.

SBI வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை – முக்கிய அறிவிப்பு!

இதற்கான புதிய விதிமுறைகளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அந்நாட்டு பிரதமர் கூறிய ட்விட்டர் பதிவில் கொரோனா வைரஸ் திடீரென மறைந்து விடாது அதனுடன் நாம் வாழ பழக வேண்டும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி, பரிசோதனைகள் மூலம் வலுவான பாதுகாப்பை நாம் உருவாக்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் விரைவில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here