மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு விளக்கம்!
புதுச்சேரியில் கொரோனா பரவல் பாதிப்பு ஒரே நாளில் 100க்கும் மேல் பதிவாகி உள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. ஒரே நாளில் 100க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
அந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் திருமண நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் மார்க்கெட், கடற்கரை சாலை, பூங்காக்களில் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதனை தொடர்ந்து வணிக, வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் 100 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் வணிகர்கள், விடுதிகள், ஓட்டல்கள், தொழிலதிபர்களுடன் பேசி கொரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். அண்டை மாநில மற்றும் மாவட்டங்களுடன் பேசி எல்லைகளில் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.