ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தால் ஊரடங்கில் ஜூலை 5ம் தேதி அதிகாலை 5 மணி வரை தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கர்நாடகாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்றின் பரவல் மற்றும் பாதிப்புகள் குறித்து வரும் நிலையில், பல தளர்வுகளையும் அரசு கடந்த வாரம் முதல் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மூன்றாவது அலை கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்க கர்நாடகா அரசு சமீபத்தில் பிரபல இருதயநோய் நிபுணரும் நாராயண ஹெல்த் நிறுவனருமான டாக்டர் தேவி ஷெட்டி தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு – எதிர்பார்ப்பு!
கர்நாடக முதல்வர் பி எஸ் எடியுரப்பா செவ்வாய்க்கிழமையான இன்று தட்சிணா கன்னடம், ஹாசன், டேவனகேர், மற்றும் சாமராஜனகர மாவட்டங்களில் ஊரடங்கு கடுப்பாடுகளை தளர்த்தியுள்ளார். ஜூலை 5ம் தேதி அதிகாலை 5 மணி வரை அதிகாலை 6 மணி முதல் மதியம் 1மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க மாநில அரசு அனுமதித்தது. இருப்பினும், குளிரூட்டப்பட்ட கடைகள், குளிரூட்டப்பட்ட ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் மால்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
TN Job “FB
Group” Join Now
இதுவரை 27 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் படிப்படியாக உயர் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளதாக கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியுரப்பா தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்திய பின்னர், கல்லூரிகளை மீண்டும் ஒவ்வொரு கட்டமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.