அக்.23ம் தேதி வரை 21 கிராமங்களில் பொது ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

0
அக்.23ம் தேதி வரை 21 கிராமங்களில் பொது ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!
அக்.23ம் தேதி வரை 21 கிராமங்களில் பொது ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!
அக்.23ம் தேதி வரை 21 கிராமங்களில் பொது ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 21 கிராமங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அக்டோபர் 23ம் தேதி வரை முழுமையான பணி நிறுத்தம் செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது ஊரடங்கு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 1,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தின் மொத்த தொற்று எண்ணிக்கை 65,91,697 ஆக அதிகரித்தது. 29 புதிய உயிரிழப்புகள் பதிவினால் மாநிலத்தில் மொத்தம் 1,39,789 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் இறப்பு விகிதம் 2.12% ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது 28,631 பேர் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மும்பை நகரத்தில் 366 பேர், ராய்காட் மாவட்டத்தில் 706 பேர், நாசிக் பிரிவு அகமது நகர் மாவட்டத்தில் மட்டும் 202, புனே பிரிவில் 528 மற்றும் கோலாப்பூர் பிரிவு 116 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதன்கிழமை (அக்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கடந்த சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. ஆனால் அகமது நகர் போன்ற மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வந்தது. அங்கு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 200 முதல் 400 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அக்டோபர் 16 அன்று கிராமப்புறங்களில் இருந்து 402 பேருக்கும், மாநகராட்சி பகுதிகளில் 23 பெருகும் தொற்று பாதிப்பு இருந்தது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு அதிகாரிகள் 21 மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதிகளில் மைக்ரோ கன்டெய்ன்ட் மண்டலங்களை உருவாக்கி அக்டோபர் 23 வரை ஊரடங்கை அறிவித்துள்ளது.

ஆதார் விவரங்களை பாதுகாக்க எளிய வசதி அறிமுகம் – “மாஸ்க் ஆதார்” முழு விவரம்!

முன்னதாக இந்த கட்டுப்பாடுகள் 61 கிராமங்களில் அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பள்ளிகள், கடைகள் மற்றும் மதவழிபாட்டு தலங்கள் போன்றவை மூடப்படும். மருந்து கடைகள், கிளினிக்குகள் மற்றும் நோய் பரிசோதனை ஆய்வகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் செயல்படலாம். இந்த கிராமங்களில் வெளியாட்களின் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here