தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? எச்சரிக்கும் ஆர்வலர்கள்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? எச்சரிக்கும் ஆர்வலர்கள்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? எச்சரிக்கும் ஆர்வலர்கள்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? எச்சரிக்கும் ஆர்வலர்கள்!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வு இல்லை என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தவிர பொதுமுடக்கத்தை அமல்படுத்தினால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்படுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்களும், பொதுநல அமைப்பாளர்களும், மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கியுள்ளனர்.

N Job “FB  Group” Join Now

சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் ஜனகராஜ் கூறும் போது, கொரோனாவால் ஏற்பட்ட இழப்பை விட ஊரடங்கால் ஏற்பட்ட இழப்புகள் தான் அதிகம். தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

இன்று முதல் மாநிலத்தில் கடும் ஊரடங்கு? முதல்வர் தகவல்!!

தவிர முன்பு அறிவித்தது போல மக்கள் கூடும் இடங்களில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். திரையரங்குகள், மால்களில் 50 சதவீதம் மக்களை மட்டுமே அனுமதிக்கலாம். ஏழை மக்களுக்கு சோப்பு, முகக்கவசம் போன்ற உபகரணங்களை இலவசமாக கொடுக்கலாம்’ என தெரிவித்துள்ளார். அதே போல அரசியல் விமர்சகரும், மருத்துவருமான சுமந்த் சி ராமன் கூறுகையில், ‘மீண்டுமாக ஊரடங்கு அறிவிப்பதற்கு சாத்தியம் இல்லை.

4 மாவட்டங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் அனைத்து இடங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அலுவலகங்களில் வீட்டிலிருந்து பணி செய்யும் முறையை கொண்டு வர வேண்டும். இன்னும் கூட 70 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமல் தான் இருக்கின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ வெளியீடு!!

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் கூறுகையில், ‘ஊரடங்கில் மக்களின் அன்றாட தேவைகளான காய்கறிகள், மளிகை பொருட்கள் கூட கிடைத்தது. ஆனால் இ-பாஸ் நடைமுறை தான் பெரும் பிரச்சனையாக இருந்தது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!!

மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் இந்த இ-பாஸ் நடைமுறையில் மக்கள் துன்பத்தை அனுபவிக்க கூடாது. மக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படாமல் இருப்பது மக்கள் அனைவரின் கைகளில் தான் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!