தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – பொது போக்குவரத்துக்கு அனுமதி! முதல்வர் உத்தரவு!

0
தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - பொது போக்குவரத்துக்கு அனுமதி! முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - பொது போக்குவரத்துக்கு அனுமதி! முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – பொது போக்குவரத்துக்கு அனுமதி! முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டிசம்பர் 15ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ஊரடங்கு:

ஒன்றிய அரசின்‌ உள்துறை அமைச்சகத்தால்‌ 30.11.2021 நாளிட்ட கடிதத்தில்‌ கொரொனா நோய்‌ தடுப்பு கட்டுப்பாடுகள்‌ 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத்‌ தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பரவல்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம்‌ கருதியும்‌, தமிழ்நாட்டில்‌ வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில்‌ கொண்டும்‌, பொதுமக்கள்‌ நலன்‌ கருதி நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனி விடுமுறை கிடையாது? வெளியான ஷாக் ரிப்போர்ட்!

ஏற்கனவே ஆந்திரபிரதேசம்‌, கர்நாடகா மாநிலங்களுக்கிடைய பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும்‌ பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

பொது இடங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்:

கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்கள்‌ கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்‌ கடைகளில்‌ பணிபுரிபவர்களும்‌, வாடிக்கையாளர்களும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌. கடைகளில்‌, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌ பொது மக்கள்‌ வரிசையில் காத்திருக்கும்‌ போது, ஒரு நபருக்கும்‌ மற்றொருவருக்கும்‌ இடையே போதுமான இடைவெளி இருக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ போடப்பட வேண்டும்‌.

நோய்த்‌தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்‌
  • நோய்த்‌ தொற்றுக்கு உள்ளானவர்களை கடண்டநிதல்‌, நோய்த்‌ தொற்றுக்குள்ளானவர்களுடன்‌ தொடர்பில்‌ இருந்தவர்களை கண்டறிதல்‌, சிகிச்சை அளித்தல்‌, தடுப்பூசி செலுத்துதல்‌ மற்றும்‌ கொரோனா நோய்த்‌ தடுப்பு
  • கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்கு, நோய்த்‌ தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள்‌ உள்ள பகுதிகளில்‌, நோய்க்‌ கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌. வரையறுக்கப்பட்ட நோய்க்‌
கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்:
  • நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ அனுமதி அளிக்கப்பட வேண்டும்‌. இந்த நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, மருத்துவ அவசர சேவைகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்குதல்‌ தவிர, இதர செயல்பாடுகள்‌ அனுமதி இல்லை. நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌, தீவிரமாக நோய்த்‌ தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள்‌ அமைத்து கண்காணிக்கப்படும்‌.
  • கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌, கூட்டம்‌ கூடுவதையும்‌ தவிர்க்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌. மேலும் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்‌ கொள்ள தவறாமல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்‌.
  • தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டாலும்‌ கூட, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைடவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌, பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. மக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும்‌ அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!