இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் வாபஸ் – மாநில அரசு அறிவிப்பு!

0
இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் வாபஸ் - மாநில அரசு அறிவிப்பு!
இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் வாபஸ் - மாநில அரசு அறிவிப்பு!
இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் வாபஸ் – மாநில அரசு அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைந்துள்ளதால் ஏகப்பட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவு ஊரடங்கு உத்தரவுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

பெங்களூருவில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் பல சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கேபி அக்ரஹாரா மற்றும் பாபுஜிநகரில் உள்ள சாமன்னா தோட்டம் போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் சுமார் 1.5 அடி தண்ணீர் தேங்கியதால் ஜே.சி.சாலையிலும், கோரமங்களா பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. மேலும் அரசின் அறிக்கையில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 8 முதல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழக வனத்துறையில் 42 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!

முன்னதாகவே, அங்கன்வாடி மையங்கள் நவம்பர் 8ம் தேதி திறக்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணிசமான விலை குறைப்பைத் தொடர்ந்து கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.100.58 ஆகவும், ரூ.85.01 ஆகவும் குறைந்துள்ளது. கர்நாடகாவில் வியாழக்கிழமை மாலை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு தோராயமாக ரூ.95.90 ஆகவும், டீசல் விலை ரூ.81.5 ஆகவும் இருக்கும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை (நவ.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சமீப வாரங்களாக கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசு ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, கர்நாடகாவில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவை கர்நாடக அரசு வெள்ளிக்கிழமையான இன்று திரும்பப் பெற்றது. “இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு இத்துடன் திரும்பப் பெறப்படுகிறது” என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here