செப்.30 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – மாநில அரசு உத்தரவு!

0
செப்.30 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் - மாநில அரசு உத்தரவு!
செப்.30 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் - மாநில அரசு உத்தரவு!
செப்.30 வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – மாநில அரசு உத்தரவு!

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் அவ்வப்போது காணப்பட்டு வந்த கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் இன்றுடன் (செப்டம்பர் 15) முடவடைய இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Swiggy, Zomato நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி – மத்திய நிதி அமைச்சகம்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் 50% திறனுடன் செயல்பட மாநில அரசு அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் சுகாதார சேவைகள், சட்டம் ஒழுங்கு, விவசாய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பிற அவசர சேவைகள் அனைத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் கண்டிப்பாக தடை செய்யப்படும் என்றும் அரசாங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

IPL 2021 – CSK அணியுடன் இணைந்த கடைக்குட்டி சிங்கம் சாம் கரன்! ரசிகர்கள் உற்சாகம்!

அதே நேரத்தில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை மீறும் எந்தவொரு நபர் மீதும் மேற்குவங்க மாநில பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் IPC தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!