ஆகஸ்ட் 3 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மேலும் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவல் தொற்றானது மாநிலம் முழுவதும் குறைந்து வரும் சூழலில் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக மணிப்பூர் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த முழு ஊரடங்கு உத்தரவில் சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மணிப்பூரில் ஜூலை 28 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகளை மீண்டும் திறப்பது மாநில அரசுகள் முடிவு – மத்திய அரசு தகவல்!
இந்த பொது முடக்கத்தில் அத்தியாவசிய சேவைகள், மருத்துவ சேவைகள், நீர் விநியோகம், மின்சாரம், தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகள், பெட்ரோல் பங்குகள், விமான போக்குவரத்து மற்றும் சரக்கு லாரிகள் இயக்கம் போன்றவற்றிற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையத்தின் தலைவரும், மாநில தலைமை செயலாளர் ராஜேஷ் குமார் அறிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
அதில் காப்பீட்டு அலுவலகங்கள் அனைத்தும் வங்கிகளைப் போலவே காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை வாரத்தில் மூன்று நாட்கள் வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர அங்கீகரிக்கப்பட்ட விநியோக ஊழியர்களால் வீட்டு விநியோகத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த இ-காமர்ஸ் அனுமதியுடன் காய்கறி, மீன், இறைச்சி மற்றும் மளிகைப் பொருட்களை வீட்டு விநியோகம் செய்ய அரசு அனுமதித்துள்ளது.