மே 10ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
மே 10ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
மே 10ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
மே 10ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அங்கு ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் எதிர்பார்க்காத அளவிற்கு பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டு விட்டது. இதனால் பல மாநிலங்களிலும் அரசுகள் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் !

அந்த வகையில் கோவா மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 29ம் தேதி இரவு 7 மணி முதல் மே 3ம் தேதி காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது தொற்று பாதிப்பு இன்னும் தீவிரமடைந்து வருவதால் கோவா அரசு ஊரடங்கு உத்தரவை இன்று காலை (மே 3) 6 மணி முதல் மே 10ம் தேதி காலை 7 மணி வரை நீட்டித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்:

அரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், பயணியர் கப்பல், வாட்டர் பார்க், உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், நீச்சல் குளங்கள், கல்வி நிலையங்கள், வாராந்திர சந்தைகள் ஆகிய அனைத்தும் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருக்கும்.

தடை செய்யப்பட்டவை:

  • சமூக / அரசியல் / விளையாட்டு / பொழுதுபோக்கு / கல்வி / கலாச்சார செயல்பாடுகள் மற்றும் பிற சபைகள் தவிர, அரசாங்கத்தின் அனுமதியுடன் நிகழ்வுகள், டி.எம் / எஸ்.டி.எம் அனுமதியுடன் 50 அல்லது அதற்கும் குறைவான நபர்களுடன் திருமணம் மற்றும் 20 க்கும் குறைவான நபர்களுடன் இறுதி சடங்குகள்.
  • உத்தியோகபூர்வ செயல்பாடுகளைத் தவிர அல்லது டி.எம் / எஸ்.டி.எம் அனுமதியுடன் பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று சேருதல்.
  • அவசர கால மருத்துவ சேவைக்காக மற்றும், அத்தியாவசிய தேவைக்காக அதிகபட்சமாக 50% பேருந்துகள் இயக்கப்படும்.

விதிவிலக்குகள்:

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உணவகங்கள் செயல்படலாம். தகுந்த பாதுகாப்புகளுடன் மீன் சந்தை மற்றும் சந்தைகள் செயல்படலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!