தீவிரமடையும் கொரோனா, முழு ஊரடங்கு அறிவிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

0
தீவிரமடையும் கொரோனா, முழு ஊரடங்கு அறிவிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தீவிரமடையும் கொரோனா, முழு ஊரடங்கு அறிவிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தீவிரமடையும் கொரோனா, முழு ஊரடங்கு அறிவிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

உலக நாடுகளையே கதிகலங்க செய்த கொரோனா மீண்டும் சீனாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்கு ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனா அதிகரிப்பு:

உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பில் சிக்கிக்கொண்டு தவித்து கொண்டிருக்கிறது. இந்த கொரோனா பெருந்தொற்று முதலில் சீனாவில் உள்ள வுஹான் நகரில் தான் பரவியது. அங்கும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் சீனாவை தொடர்ந்து ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல்வேறு நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த கொடிய கோவிட்-19 வைரஸால் ஈடுகட்ட முடியாத அளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அதனால் அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல் அலையிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.

நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது – அரசு அறிவிப்பு!

கொரோனா முதல் அலையை தொடர்ந்து 2வது அலையில் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. உயிரிழப்புகள் மட்டுமல்லாது மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையை சந்திக்க நேரிட்டது. இதனை சரி செய்யும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு தொற்று பரவல் குறைந்து வருகிறது. தற்போது உலக நாடுகள் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் ஒரு இலங்கை போன்ற ஒரு சில இடங்களில் நோய்த்தொற்று பரவிக்கொண்டே இருக்கிறது.

நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – விடுமுறை பட்டியல் வெளியீடு!

இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சீனாவில் முக்கிய நகரங்களில் விமான சேவை உள்ளிட்ட போக்குவரத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்சூவ் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால் உடனடியாக அப்பகுதியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here