உலகம் முழுவதும் 61.53 கோடியை தாண்டிய கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல்!

0
உலகம் முழுவதும் 61.53 கோடியை தாண்டிய கொரோனா - வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் 61.53 கோடியை தாண்டிய கொரோனா - வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் 61.53 கோடியை தாண்டிய கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தற்போது வெளியான தகவலின் படி உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.53 கோடியை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த 20219 ம் ஆண்டின் இறுதியில் சீனா நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. அந்நாட்டின் உஹான் நகரில் பரவிய கொரோனா விமானப் பயணிகள் மூலம் அடுத்தடுத்த நாடுகளுக்கு விரைவாக பரவியது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்தது. இத்தகைய நேரத்தில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் படுக்கைகள் பற்றாகுறையும் நிலவியது.

அதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. அப்போது உலக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் எப்போதும் கிருமி நாசினி மற்றும் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

உலகம் முழுவதும் குறைந்த கொரோனா மரணங்கள் – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தும் பணிகள் தொடங்கியது. அனைத்து நாடுகளிலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.53 கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 59,43,28,361பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 65,22,891 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!