டெல்லியில் விரைவில் பொதுமுடக்கம்? முதல்வர் விளக்கம்!!

0
டெல்லியில் விரைவில் பொதுமுடக்கம்? முதல்வர் விளக்கம்!!
டெல்லியில் விரைவில் பொதுமுடக்கம்? முதல்வர் விளக்கம்!!
டெல்லியில் விரைவில் பொதுமுடக்கம்? முதல்வர் விளக்கம்!!

நாட்டில் தற்போது மிக அதிகமான அளவில் கொரோனா பாதித்தவர்களை காண முடிகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விரைவில் பொதுமுடக்ககம் அமல்படுத்தப்படுமா என்று டெல்லி முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

விரைவில் பொதுமுடக்கம்:

நாட்டில் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக அதிகமான அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெறுகிறது. அதேபோல் கொரோனா பாதிப்பு அதிகமாக கண்டறியப்படும் சில மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விலக்கு ? புதிய கொரோனா கட்டுப்பாட்டுகள் !

மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி பகுதியில் கொரோனாவின் நான்காவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்களை அதிகமாக கொரோனா தொற்று தாக்கி வருகிறது. இதன் காரணமாக தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டெல்லியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் டெல்லியில் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்படுமா என்று தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. தற்போது இதனை நீக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். அவர் டெல்லியில் பொதுமுடக்கம் இருக்காது என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்தார்.

கன்னியாகுமரி செல்வதற்கு இ பாஸ் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும் தடுப்பூசியை வயது வரம்பு இல்லாமல் செலுத்தினால் டெல்லியில் 2 முதல் 3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்றும், தடுப்பூசி செலுத்துவதற்கு வயது வரம்பை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். தற்போது 7 முதல் 10 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்க இருப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here