உலக நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – WHO எச்சரிக்கை!

0
உலக நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - WHO எச்சரிக்கை!
உலக நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - WHO எச்சரிக்கை!
உலக நாடுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – WHO எச்சரிக்கை!

நாடு முழுவதும் மக்கள் கொரோனாவின் மூன்று அலைகளின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், தற்போது நான்காம் அலை பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து WHO அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல்:

மக்கள் பலர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உருமாறி மூன்று அலைகளில் பல்வேறு சேதாரங்களை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது தான் அதில் இருந்து மீண்டு வரும் நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இது நான்காம் அலையாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மனிதன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டால் அவனுக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்பது இயற்கையான ஒன்று.

ஆனால் ஆண்டுதோறும் கொரோனாவின் அலைகள் வேகமெடுத்து மக்கள் பாதிக்கப்படுவதால் கொரோனாவின் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 110 நாடுகளில் உருமாறிய வைரஸ்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து WHO அமைப்பின் அதிகாரி டேவிட் நபரோ பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதில் வைரஸ் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் மீண்டும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது என தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்படுபவர் நீண்ட நாள்கள் கொரோனாவுடன் போராட வேண்டிய வாய்ப்பை அதிகரிக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கிறார். மேலும் நீண்ட நாட்கள் கொரோனா உடன் போராடுவது என்பது 4 வாரங்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு நீட்டிப்பது, உடல் சோர்வு, மூச்சுவிட சிரமப்படுவது, மூட்டு வலி, மறதி, அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஆகியவை மாதங்களை கடந்து வருடங்கள் வரை நீடிக்கலாம் எனவும், கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் இப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என அவர் எச்சரித்துள்ளார். இந்த பாதிப்பு கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வயது முதிந்தவர்கள் ஆகியோர்களை அதிகம் பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

மேலும் விளைவு குறைவு என கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் மீது அவர் கவலைகொள்கிறார். அது மட்டுமில்லாமல் கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளார். உருமாறிய வைரஸ்கள் ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்பில் இருந்து தப்பலாம் என எச்சரித்த அவர், பொது மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here