இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,923 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!

0
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,923 பேருக்கு கொரோனா உறுதி - சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,923 பேருக்கு கொரோனா உறுதி - சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,923 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கடந்த ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,923 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 80,000ஐ நெருங்கி இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி மாதம் வீழ்ச்சியடைந்த கொரோனா 3ம் அலைக்கு பிற்பாடு இந்தியா முழுவதும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவும் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து மக்கள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டுமாக உயரத் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு சில வாரங்களாக மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனை கவனத்தில் கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கையாளும்படி வலியுறுத்தி இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,923 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,19,396 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் 5% அகவிலைப்படி உயர்வு?

மேலும், 17 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,24,890 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 7,293 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,15,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 79,313 பேர் மருத்துவமனை சிகிச்சையின் கீழ் உள்ளனர். இதனுடன் இந்தியாவில் இதுவரை 1,96,32,43,003 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 13,00,024 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here