நாட்டில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!

0
நாட்டில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை அறிக்கை!
நாட்டில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை அறிக்கை!
நாட்டில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!

கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது, சமீபத்திய சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்திற்கான கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

நாட்டில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிய கொரோனா தொற்று கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேலாக நாட்டின் மொத்த பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்கை நிலையை உலுக்கி வருகிறது. ஆரம்பத்தில் மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, நாளடைவில் கணிசமான எண்ணிக்கையை நெருங்கியது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை கையாள தொடங்கினர்.

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு – ஆவின் நிறுவனத்திற்கு நெருக்கடி!

இதன்விளைவால், கொரோனா பாதிப்பின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளை கட்டுப்படுத்த முடிந்தது. இதன் பின்னர், மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்ப தொடங்கினர். இந்நிலையில், மீண்டும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் கொரோனா 3ம் அலை பரவல் தொடங்கியது. ஆனால், 3ம் அலையினால் பாதிக்கும் வேகம் அதிகரித்த போதிலும், பாதிப்பின் தன்மை மிதமாகவே இருந்தது. அரசின் தீவிர முயற்சியினால், 3ம் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் சில வாரங்களாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரங்களில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நோய் தொற்று விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, புதிதாக 14,092 பேர் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 4,42,53,464 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 41 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 5,27,037 ஆக உயிரிழந்தோர் விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.54% ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆகவும் உள்ளது. நாட்டில் நேற்று மட்டும் 28,01,457 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here