சீனாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – 3வது நகரத்தில் லாக் டவுன் அமல்!

0
சீனாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு - 3வது நகரத்தில் லாக் டவுன் அமல்!
சீனாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு - 3வது நகரத்தில் லாக் டவுன் அமல்!
சீனாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – 3வது நகரத்தில் லாக் டவுன் அமல்!

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா:

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தாக்கம் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் உலக நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கொரோனா தொற்று பரவும் விகிதத்தை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் கொரோனா பரவும் விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது.

கர்பத்திலும் சீரியலை விட்டு விலகாத ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ஒரு நெகிழ்ச்சி பதிவு!

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது தொடர்ந்து தற்போது ஒரு வாரத்தில் 3 நகரங்களில் கொரோனா தொற்றுக் காரணமாக மொத்த நகரமும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் வடக்கு மற்றும் தெற்கு வர்த்தகப் பகுதிகளை இணைக்கும் Lanzhou நகரம், தொடர்ந்து மங்கோலியா பகுதியில் இருக்கும் Ejin ஆகியவற்றைத் தொடர்ந்து புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ள Heilongjiang மாகாணத்தில் இருக்கும் Heihe பகுதியில் வியாழக்கிழமை முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 7ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி – கொரோனா தீவிரம் எதிரொலி!

சீனாவின் இந்த 3 பகுதிகளுக்குள் நுழையவும் வெளியேறவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய எல்லை பகுதியில் இருக்கும் 16 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி காலையில் மட்டும் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!